தனியார் பஸ்சில் தீ விபத்து 36 பயணியர் உயிர் தப்பினர்
தனியார் பஸ்சில் தீ விபத்து 36 பயணியர் உயிர் தப்பினர்
ADDED : மே 17, 2026 12:39 AM

ஹாசன்: தனியார் சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்த விபத்தில், பஸ்சில் இருந்த 36 பயணியரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் இருந்து பெங்களூரு நோக்கி பயணியருடன் தனியார் சொகுசு பஸ் நேற்று முன்தினம் புறப்பட்டது. ஹாசன் மாவட்டம் சாந்திகிராமம் பகுதியில் நேற்று அதிகாலை 2:30 மணிக்கு பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென பஸ்சின் டயர் வெடித்தது. இதையடுத்து, பஸ்சை சாலையோரத்தில் ஓட்டுநர் நிறுத்தினார்.
பயணியர் அனைவரும் பஸ்சில் இருந்து உடனடியாக இறக்கப்பட்டனர். திடீரென பஸ்சில் தீப்பிடித்தது. பஸ் முழுதும் தீ பரவி எரிந்து நாசமாகியது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்த 36 பயணியரும் உயிர் தப்பினர். தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். பயணியர் வேறு பஸ்சில் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சாந்திகிராமம் போலீசார் விசாரிக்கின்றனர்.
