ரூ.1.15 கோடி மதிப்புள்ள 385 மொபைல் போன்கள் மீட்பு
ரூ.1.15 கோடி மதிப்புள்ள 385 மொபைல் போன்கள் மீட்பு
ADDED : ஏப் 17, 2026 05:05 AM

பெங்களூரு: காணாமல் மற்றும் திருட்டு போன, 1.15 கோடி ரூபாய் மதிப்புள்ள, 385 மொபைல் போன்களை போலீசார் மீட்டுள்ளனர்.
பெங்களூரு போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெங்களூரு நகர கிழக்கு பிரிவு போலீஸ் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 14 போலீஸ் நிலையங்களில், கடந்த ஆண்டு மார்ச் முதல் மொபைல் போன்கள் காணாமல் போனதாக, திருட்டு போனதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதில், பானஸ்வாடி 87; ஜெ.பி., நகர் 81; கோவிந்தபுரா 35; கே.ஜி., ஹள்ளி 30; ஹலசூரு 30; டி.ஜெ., ஹள்ளி 29; ஹென்னுார் 19; கமர்ஷியல் தெரு 16; புலிகேசிநகர் 15; இந்திராநகர் 12; ஆர்.எம்., நகர் 10; பையப்பனஹள்ளி 8; சிவாஜிநகர் 8; பாரதிநகர் 5 என மொத்தம் 385 மொபைல் போன்கள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட மொபைல் போன்களின் மதிப்பு 1.15 கோடி ரூபாயாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
