/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
3வது யானையும் ஹாசனில் பிடிபட்டது
/
3வது யானையும் ஹாசனில் பிடிபட்டது
ADDED : மார் 24, 2025 04:55 AM

ஹாசன்: ஹாசனில் மக்களை அச்சுறுத்தி வந்த மூன்றாவது யானையும் பிடிபட்டது.
ஹாசன் மாவட்டத்தில் நடப்பாண்டு துவக்கத்தில் இருந்து யானை தாக்கியதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் வனத்துறை அதிகாரிகளுடன், அமைச்சர் ஈஸ்வர் கன்டரே ஆலோசனை கூட்டம் நடத்தினார். மக்களை அச்சுறுத்தி வரும் மூன்று யானைகளையும் பிடித்து, வேறு இடத்தில் விட உத்தரவிட்டிருந்தார்.
யானையை பிடிக்கும் முயற்சியை மார்ச் 16ம் தேதி துவங்கினர். முதல் நாளிலேயே ஒரு யானை பிடிபட்டது. 2வது யானை மூன்று நாட்களுக்கு பின் பிடிபட்டது. இந்நிலையில் நேற்று மூன்றாவது யானையும் பிடிபட்டுள்ளது.
இது தொடர்பாக தனது, 'எக்ஸ்' தளத்தில் அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே குறிப்பிட்டுள்ளதாவது:
ஹாசன் மாவட்டம் சக்லேஸ்பூர், பேலுார் மக்களை அச்சுறுத்தி வந்த மூன்றாவது யானையும் இன்று (நேற்று) ஹெப்பனஹள்ளி கிராமத்தில் பிடிபட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதி மக்கள் இனி நிம்மதியாக இருப்பர்.
தங்கள் உயிரை பணயம் வைத்து, யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட வனத்துறையினர், ஊழியர்கள், கால்நடை மருத்துவர்கள், தன்னார்வலர்களின் செயல் பாராட்டத்தக்கது. மனித - யானை மோதலை கட்டுப்படுத்த, தேவையான நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.