மிருகக்காட்சி சாலையில் 4 சிங்க குட்டி உயிரிழப்பு
மிருகக்காட்சி சாலையில் 4 சிங்க குட்டி உயிரிழப்பு
ADDED : செப் 27, 2026 11:15 PM

அ நிறம் | அளவு
ஷிவமொக்கா: ஷிவமொக்கா உயிரியல் பூங்காவில் 'சாரா' என்ற சிங்கம் ஈன்ற நான்கு குட்டிகள் இறந்தது தாமதமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஷிவமொக்கா மாவட்டம், தியாவரேகொ ப்பாவில் உயிரியல் பூங்கா உள்ளது. ஆசிய சிங்கங்களை இனப்பெருக்கம் செய்யும் நோக்கில், 'சிவா, சாரா' என இரு சிங்கங்கள், 2025ல் விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ், மத்திய பிரதேச மாநிலம் இந்துாரில் இருந்து கொண்டு வரப்பட்டன.
இதில், சாரா என்ற 5 வயது ஆசிய பெண் சிங்கம், கடந்த 16ம் தேதி நான்கு குட்டிகளை ஈன்றது. முதன் முறையாக தாயானதுடன் குட்டிகளை பராமரிக்க தெரியவில்லை. இதனால் இரண்டு நாட்களில், நான்கு குட்டிகளும் அடுத்தடுத்து உயிரிழந்தன.
இவ்விஷயம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
