ADDED : செப் 27, 2026 11:15 PM
மைசூரு ஹான்சியா கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமெஷிட்டி, 59. இவர் இன்னும் ஓரிரு மாதங்களில் பணி ஓய்வு பெற உள்ளார். இவர் மீது அதே பள்ளியில் படிக்கும் 7ம் வகுப்பு மாணவியர் நான்கு பேர், கடந்த 25ம் தேதி பாலியல் புகார் அளித்தனர். இதனால், ராமஷெட்டி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மைசூரு தெற்கு போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில், சக ஆசிரியர்களான கோபிநாத், உஷா கிரண், நாகரத்னா ஆகியோர், தலைமை ஆசிரியர் ராமஷெட்டி மீது போலி புகார் அளிக்க மாணவியரை கட்டாயப்படுத்தியது தெரியவந்தது. இது, வழக்கில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. போலி புகார் அளிக்க மாணவியரை கட்டாயப்படுத்திய ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு சென்ட்ரல் மாவட்ட காங்கிரஸ் தலைவராக தமிழரான சரவணன் இன்று பொறுப்பேற்கிறார். சிவாஜிநகர் குயின்ஸ் ரோட்டில் உள்ள பாரத் ஜோடோ பவனில் நிகழ்ச்சி நடக்கிறது.
ராம்நகரின் பிடதியில் டவுன்ஷிப் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சாலையை மறித்து போராடிய 15 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
''லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு, அவர் தந்தையின் மீதும் நம்பிக்கை இல்லை. தேர்தல் ஆணையம் மீதும் நம்பிக்கை இல்லை. வறட்சி தொடர்பாக பிரதமரை சந்திக்க அனைத்து கட்சி குழுவுடன் நாங்கள் செல்ல மாட்டோம்,'' என்று, எதிர்க்கட்சி தலைவர் அசோக் நேற்று கூறினார்.
கால்நடை மருத்துவர் தேர்வில் கைதான பா.ஜ., பிரமுகர் பசவராஜ் கன்னாலேயின் நண்பர் பவன் என்பவரும், தேர்வர் ஒருவரிடம் டீலிங் பேசி 30 லட்சம் ரூபாய் வாங்கியதும், அந்த பணத்தை தனக்கு தெரிந்த ஒருவரிடம் கொடுத்து, கால்நடை மருத்துவர் தேர்வில் வெற்றி பெற வைத்ததும், சி.ஐ.டி., விசாரணையில் தெரிந்துள்ளது. தலைமறைவாக உள்ள பவனை தேடுகின்றனர்.
''பீஹார் தேர்தலில் பின்பற்றிய வியூகத்தை, கர்நாடகாவில் தேசிய ஜனநாயக கூட்டணி கையாள முடியாது,'' என மாநில காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத் தெரிவித்தார்.
