/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
படகு கவிழ்ந்து மீனர்கள் 4 பேர் பலி?
/
படகு கவிழ்ந்து மீனர்கள் 4 பேர் பலி?
ADDED : ஜூலை 31, 2025 07:55 AM
உத்தர கன்னடா: மீன் பிடிக்க நேற்று மதியம் புறப்பட்ட மீனவர்களின் படகு கவிழ்ந்ததில், நான்கு மீனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. உத்தர கன்னடா மாவட்டம் பட்கல்லின் அரபிக் கடலில் மீன் பிடிக்க, நேற்று காலை மனோகர் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி படகில் ஆறு மீனவர்கள் சென்றனர்.
இவர்களின் படகு மீது அலை வேகமாக மோதியது. படகு கவிழ்ந்தது.
படகில் இருந்த ஆறு பேரும் நீரில் மூழ்கினர். இதை பார்த்த அ ருகில் இருந்த மற்ற படகில் இருந்த மீனவர்கள் காப்பாற்ற வந்தனர்.
இதில் மனோகர், ராமா கர்வி ஆகியோர் மீட்கப் பட்டனர். ராமகிருஷ்ணா, சதீஷ், கணேஷ், நிஷ்சித் ஆகியோர் நீரில் மூழ்கினர்.
அவர்களை தேடும் பணியில் மீட்புப்படையினர், போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
பட்கல் ரூரல் போலீசார் வி சாரிக்கின்றனர்.