UPDATED : நவ 05, 2026 12:00 AM
ADDED : நவ 04, 2026 10:39 PM

பெங்களூரு: ‘மாநிலத்தில் 25,00 0க்கும் மேற்பட்ட தனியார் மழலையர் பள்ளிகள் மூடப்படும்; 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் ஆசிரியர்களின் வேலை பறிபோகும் அபாயம் இருக்கிறது’ என, கர்நாடக மழலையர் பள்ளிகள் க வுன்சில் எச்சரித்துள்ளது.
கர்நாடகாவில் ஆயிரக்கணக்கான தனியார் மழலையர் பள்ளிகள் உள்ளன.
இதில், சில பள்ளிகளின் கட்டடங்கள் மோசமான நிலையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், மழலையர் பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு வழங்கியது.
குறிப்பாக, 2,000 சதுர அடியில் பள்ளி இருக்க வேண்டும்; வாடகை கட்டடத்தில் இயங்கும் பள்ளியின் 30 ஆண்டுக்கால லீஸ் பத்திரம் மாவட்ட கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பன போன்ற அம்சங்கள் வலியுறுத்தப்பட்டன.
இதை எதிர்த்து கர்நாடக மழலையர் பள்ளிகள் கவுன்சில் அமைப்பினர், பெங்களூரு கப்பன் பூங்காவில் நேற்று போராட்டம் நடத்தினர். அவர்கள் கூறியதாவது:
இந்த புதிய விதிமுறைகளால், மாநிலத்தில் உள்ள 25,000க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்படும்.
அவற்றில் பணிபுரியும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் ஆசிரியர்கள் பணி பறிபோகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், இப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும்.
வாட கை கட்டடத்தில் பெரும்பாலான பள்ளிகள் இயங்குகின்றன. பெரும்பாலான கட்டடத்தின் உரிமையாளர்கள் 30 ஆண்டுகளுக்கு லீஸ் பத்திரம் கொடுக்க முன் வரமாட்டார்கள்.
2,000 சதுர அடி பரப்பளவில் பள்ளிகள் இயங்க வேண்டும் என்பது தேசிய கல்வி கொள்கைக்கு முரணானது.
எனவே, தனியார் மழலையர் பள்ளிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
