/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குழப்பத்தால் பலியான 4 உயிர்கள் மைசூரு 10 வழி சாலையில் கோரம்
/
குழப்பத்தால் பலியான 4 உயிர்கள் மைசூரு 10 வழி சாலையில் கோரம்
குழப்பத்தால் பலியான 4 உயிர்கள் மைசூரு 10 வழி சாலையில் கோரம்
குழப்பத்தால் பலியான 4 உயிர்கள் மைசூரு 10 வழி சாலையில் கோரம்
ADDED : ஏப் 04, 2025 07:00 AM

மாண்டியா: மாண்டியா அருகே, பத்து வழி சாலையில் செல்வதா, இணைப்பு சாலையில் செல்வதா என்று குழப்பத்தால், கார் மீது அரசு பஸ் மோதியதில் ஒரே குடும்பத்தின் 4 பேர் உயிரிழந்தனர்.
மைசூரின் பிரியப்பட்டணா தாலுகா சிகுரு கிராமத்தை சேர்ந்தவர் சத்யானந்தா ராஜே அர்ஸ், 51; கான்ட்ராக்டர். இவரது அண்ணன் சந்திரசேகர், 62. இவர்கள் இருவரும் பெங்களூரு ஜெ.பி.நகரில் குடும்பத்தினருடன் வசிக்கின்றனர்.
சிகுரு கிராமத்தில் வசித்த சத்யானந்தாவின் உறவினர் நேற்று காலை மரணம் அடைந்தார். இறுதி சடங்கில் கலந்து கொள்ள, பெங்களூரில் இருந்து சிகுரு கிராமத்திற்கு சத்யானந்தா, அவரது மனைவி நிச்சிதா, 45, சந்திரசேகர், அவரது மனைவி சுவிதினி ராணி, 62 ஆகியோர், காரில் புறப்பட்டனர்; காரை சத்யானந்தா ஓட்டினார்.
பெங்களூரு - மைசூரு பத்துவழி சாலையில், மாண்டியா அருகே துபினகெரே பகுதியில், காலை 11:30 மணிக்கு கார் சென்றது. அப்போது பின்னால் வந்த, கர்நாடக அரசு சொகுசு பஸ், கார் மீது மோதியது. மோதிய வேகத்தில் கார் சின்னாபின்னமானது.
தகவல் அறிந்து மாண்டியா எஸ்.பி., மல்லிகார்ஜுன் பாலதண்டி, மாண்டியா ரூரல் போலீசார் வந்தனர்.
கிரேன் இயந்திரம் மூலம் பஸ்சுக்குள் சிக்கிய கார் மீட்கப்பட்டது. காருக்குள் இருந்த நான்கு பேரும் இறந்தது தெரிந்தது.
பத்து வழி சாலையில் இருந்து இணைப்பு சாலைக்கு செல்ல, துபினகெரே பகுதியில் பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது.
காரை ஓட்டி சென்ற சத்யானந்தா, துபினகெரே பிரிவு பகுதிக்கு சென்றதும், முதலில் இணைப்பு சாலை வழியாக செல்ல நினைத்து, காரின் வேகத்தை குறைத்து உள்ளார்.
பின், என்ன நினைத்தாரோ தெரியவில்லை, பத்து வழி சாலையில் செல்ல முடிவு செய்தார். இந்த குழப்பத்தால் பின்னால் வேகமாக வந்த அரசு பஸ், கார் மீது மோதி விபத்து நடந்தது தெரியவந்துள்ளது.

