ADDED : ஜூலை 07, 2025 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: காங்கிரஸ் கட்சியின் நான்கு பேர், பி.டி.ஏ.,வுக்கு நியமன உறுப்பினர்கள் ஆகி உள்ளனர்.
கர்நாடக அரசின் நகர வளர்ச்சி துறைக்கு உட்பட்டது பி.டி.ஏ., எனும் பெங்களூரு வளர்ச்சி ஆணையம்.
இந்த ஆணையத்தின் நியமன உறுப்பினர்களாக, கர்நாடக மகளிர் காங்கிரஸ் முன்னாள் தலைவி மஞ்சுளா நாயுடு, காங்கிரஸ் பிரமுகர்கள் மாருதிசேவா நகர் அமர்நாத், கெங்கேரி காந்தி, ராம்நகரின் கனகபுரா வெங்கடராயதொட்டியை சேர்ந்த சுஜய் ஆகியோரை நியமனம் செய்து, அரசு உத்தரவிட்டு உள்ளது.