தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/முதியவரை கொலை செய்து கிணற்றில் வீசிய 4 பேர் கைது

முதியவரை கொலை செய்து கிணற்றில் வீசிய 4 பேர் கைது

முதியவரை கொலை செய்து கிணற்றில் வீசிய 4 பேர் கைது


UPDATED : நவ 20, 2026 12:00 AM

ADDED : நவ 19, 2026 08:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2026 12:00 AM ADDED : நவ 19, 2026 08:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகல்கோட்: காணாமல் போன முதியவர், கொலை செய்யப்பட்டு இரும்பு பெட்டியில் அடைத்து கிணற்றில் வீசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இவரை கொலை செய்த நான்கு பேர் கைதாகினர்.

பாகல்கோட் மாவட்டம், ஹுன்குந்த் தாலுகாவின் ஹூவனுார் கிராமத்தில் வசித்தவர் அசோக் அங்கடி, 65. இவர் நடப்பாண்டு மார்ச் 12ல் காணாமல் போனார். பல இடங்களில் குடும்பத்தினர் தேடினர். மார்ச் 14ல் ஹுன்குந்த் போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தனர்.

பல கோணங்களில் விசாரணை நடத்திய போலீசார், அசோக் அங்கடி கொலை செய்யப்பட்டதை கண்டுபிடித்தனர்.

கிணற்றில் இரும்பு பெட்டியில் இருந்த அவரது உடலை மீட்டனர். சம்பவம் தொடர்பாக ஆர்.எம்.பி., டாக்டர் சுதீப், 24, இவரது சகோதரர் சந்தீப், 25, ரமேஷ், 30, சங்கனகவுடா, 30, ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டனர்.

அசோக் அங்கடிக்கு சொந்தமான கட்டடத்தை, சுதீப், சந்தீப் சகோதரர்கள் வாடகைக்கு எடுத்து மருத்துவமனை மற்றும் துணிக்கடை நடத்தினர். வாடகை பாக்கி வைத்திருந்தனர். 1.50 லட்சம் ரூபாய் கடனும் வாங்கியிருந்தனர். இதையும் திருப்பி தரவில்லை.

அசோக் அங்கடி வாடகை பாக்கியையும், கடனையும் கேட்டு நெருக்கடி கொடுத்தார். எனவே மார்ச் 12ம் தேதியன்று, தங்கள் கூட்டாளிகள் ரமேஷ், சங்கனகவுனாவுடன் சேர்ந்து, அசோக் அங்கடியை இரும்பு ராடால் அடித்து கொலை செய்தனர்.

உடலை மூன்று பாகங்களாக வெட்டி, இரும்பு பெட்டியில் போட்டனர். பெட்டியில் கல்லை கட்டி விஜயபுரா நகரின் கிணற்றில் வீசினர்.

அசோக் அங்கடியை காணாமல் அவரது குடும்பத்தினர் தேடிய போது, அவர்களுடன் சேர்ந்து தாங்களும் தேடுவது போன்று நடித்தனர்.

அதுமட்டுமின்றி அவரது வீட்டிலேயே தீபாவளி கொண்டாடி, விருந்து சாப்பிட்டனர்.

இதற்கிடையே அசோக் அங்கடியின் மொபைல் போனில் இருந்து, 150 ரூபாய் ப ரிமாற்றம் செய்யப்பட்டது.

இதை கண்காணித்த போலீசார் விசாரணை நடத்தியபோது, சுதீப், சந்தீப் மீது சந்தேகம் ஏற்பட்டது. இவர்களை விசாரித்த போது, கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். நால்வரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us