கர்நாடக தேவர் சங்க கட்டடம் ஸ்ரீதர் வாண்டையார் உறுதி
கர்நாடக தேவர் சங்க கட்டடம் ஸ்ரீதர் வாண்டையார் உறுதி
UPDATED : நவ 20, 2026 12:00 AM
ADDED : நவ 19, 2026 08:28 PM

பெங்களூரு: கர்நாடக தேவர் சங்கத்திற்கு இடம் வாங்க நிதியுதவி அளிப்பதாக, ஸ்ரீதர் வாண்டையார் உறுதி அளித்துள்ளார்.
பெங்களூரில் கர்நாடக தேவர் சங்க அலுவலகத்தில், சங்கத்திற்கு இடம் வாங்குவது தொடர்பாக நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீவாண்டையார் பங்கேற்றார். அவரை சங்கத்தினர் வரவேற்றனர்.
அப்போது அவர், ‘கர்நாடக தேவர் சங்கத்திற்கு இடம் வாங்க நிதியுதவி அளிப்பேன். பெங்களூரில் உள்ள தமிழ் சங்கங்களுக்கு எப்போதும் உதவி செய்ய கடமைப்பட்டுள்ளேன்’ என்றார்.
கூட்டத்தில், சங்க தலைவர் சுப கனகராஜ் தேவர், செயலர் தன்ராஜ் தேவர், முன்னாள் தலைவர் மணிகண்ட தேவர், முன்னாள் துணைத் தலைவர் தங்கபாண்டி தேவர், ஒருங்கிணைப்பு செயலர் மனோகர் தேவர், இணை செயலர் நாகேந்திர தேவர், தெய்வேந்திர தேவர் மற்றும் தங்கபாண்டி தேவரின் மகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
