/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கொள்ளை வழக்குகளில் நேபாளத்தின் 4 பேர் கைது
/
கொள்ளை வழக்குகளில் நேபாளத்தின் 4 பேர் கைது
ADDED : அக் 22, 2025 03:30 AM
பெல்லந்துார் : உணவு விற்பனை பிரதிநிதிகளை குறிவைத்து, கொள்ளையடித்த நேபாளத்தின் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு, பெல்லந்துாரை சேர்ந்தவர் சுரேஷ், 22. ஆன்லைன் நிறுவனத்தில் உணவு விற்பனை பிரதிநிதியாக உள்ளார். கடந்த மாதம் 13ம் தேதி இரவு, வாடிக்கையாளருக்கு உணவு வினியோகிக்க பைக்கில் சென்றார். கசவனஹள்ளி சாலையில் சென்றபோது, பைக்கை மறித்த ஆறு பேர், சுரேஷை தாக்கி, அவரது மொபைல் போனை பறித்துச் சென்றனர்.
சுரேஷ் புகார் அளித்ததைத் தொடர்ந்து, பெல்லந்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில், கோடதி கேட் பகுதியில் வசித்த, நேபாளத்தின் பராஸ் சிங், 25, முகேஷ் சாய், 19, பிபின் கார்கி, 20, சமீர் லோஹர், 23, ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானோர் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்தது தெரிந்தது.
மேலும் இருவர் தலைமறைவாகிவிட்டனர். இவர்களிடம் இருந்து 9 மொபைல் போன்கள், மூன்று பைக் மீட்கப்பட்டன. இவர்கள் கைதாகி இருப்பதன் மூலம் ஹெப்பகோடி, பரப்பன அக்ரஹாரா, பண்டேபாளையா, பெல்லந்துார் போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருந்த, ஒன்பது வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. உணவு விற்பனை பிரதிநிதிகளை குறி வைத்து, இவர்கள் கொள்ளையடித்தது விசாரணையில் தெரிந்தது.