/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மைசூரு மிருகக்காட்சி சாலையில் 4 புதிய வரவு
/
மைசூரு மிருகக்காட்சி சாலையில் 4 புதிய வரவு
ADDED : மார் 25, 2025 12:17 AM

மைசூரு : மைசூரு உயிரியல் பூங்காவில், ஒட்டகசிவிங்கி ஆண் குட்டியையும்; வரிக்குதிரை ஒரு குட்டியையும் ஈன்றுள்ளது. இத்துடன், இங்கிலாந்தில் இருந்து இரண்டு பெண் கொரில்லாக்கள் விரைவில் வர உள்ளன.
மைசூரு மிருகக்காட்சி சாலையில் கடந்த வாரம் 'பப்ளி' என்ற பெண் ஒட்டகச்சிவிங்கி, ஆண் குட்டி ஈன்றுள்ளது. தாயும், குட்டியும் நலமாக உள்ளனர். சில நாட்கள் கழித்த பின்னர், பொது மக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும்.
இதன் மூலம் இந்த மிருகக்காட்சி சாலையில் ஒட்டகச்சிவிங்கியின் எண்ணிக்கை, எட்டாக உயர்ந்து உள்ளது. 2022ல் 'பப்ளி' ஒட்டகச்சிவிங்கி, பெண் குட்டியை ஈன்றது குறிப்பிடத்தக்கது.
அதுபோன்று, வரிக்குதிரையும், ஆண் குட்டியை ஈன்றுள்ளது. இரண்டும் நலமுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுமட்டுமின்றி, இங்கிலாந்தில் பிளாக்பூல் மிருகக்காட்சி சாலையில் இருந்து 12 மற்றும் 14 வயதில் இரு பெண் கொரில்லாக்கள் இம்மாதம் 12ம் தேதி மைசூரு மிருகக்காட்சி சாலைக்கு வந்துள்ளன. இவைகளுடன் அந்நாட்டில் இருந்து நான்கு பயிற்சியாளர்கள் வந்துள்ளனர்.
மைசூரு சீதோஷ்ண நிலைக்கு தங்களை தயார்படுத்தி கொள்ளும் வரை, தனிமையில் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.