/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'ஓவர்டேக்' செய்தபோது விபத்து 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி
/
'ஓவர்டேக்' செய்தபோது விபத்து 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி
'ஓவர்டேக்' செய்தபோது விபத்து 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி
'ஓவர்டேக்' செய்தபோது விபத்து 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி
ADDED : மே 26, 2025 11:48 PM

பல்லாரி: இரும்பு தாது ஏற்றிக் கொண்டு அதிவேகமாக வந்த டிப்பர் லாரி மீது கார் மோதியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.
பல்லாரி மாவட்டம், சந்துாரின் லட்சுமிபுராவை சேர்ந்தவர் அசோக், 28. இவரது மனைவி ஜெயலட்சுமி, 21. இவர்களின் மகள் ஒன்பது மாத குழந்தை பிந்துஸ்ரீ, ஜெயலட்சுமியின் சகோதரி ஆஷா, 28, இவரின் மகன் சாய் சாத்விக், 5, மகள் லட்சுமி, 3, ஆகியோர் ஹொஸ்பேட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்க்க காரில் சென்று கொண்டிருத்தனர்.
ஜெய்சிங்காபூர் அருகே சென்றபோது, எதிரே இரும்பு தாது ஏற்றிக் கொண்டு அதிவேகமாக வந்த டிப்பர் லாரி, பொலிரோ கார் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில், அசோக், சாய் சாத்விக் தவிர, மற்ற அனைவரும் உயிரிழந்தனர். தகவல் அறிந்த சந்துார் போலீசார், படுகாயம் அடைந்த அசோக், சாய் சாத்விக்கை கொப்பால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி ஓட்டுநர், லாரியை அங்கேயே விட்டு விட்டு தலைமறைவாகிவிட்டார்.
சந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.