தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ உணவு 'டெலிவரி' வாலிபரை தாக்கிய 2 பெண்கள் உட்பட 4 பேருக்கு வலை

 உணவு 'டெலிவரி' வாலிபரை தாக்கிய 2 பெண்கள் உட்பட 4 பேருக்கு வலை

 உணவு 'டெலிவரி' வாலிபரை தாக்கிய 2 பெண்கள் உட்பட 4 பேருக்கு வலை


ADDED : ஆக 09, 2026 12:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 09, 2026 12:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எலஹங்கா: உணவு டெலிவரி வாலிபரை தாக்கிய இரு இளம் பெண்கள் உட்பட நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

யாத்கிர் மாவட்டம், ஷாப்பூரை சேர்ந்தவர் பசவராஜ். பெங்களூரில் தங்கி, பெங்களூரு வடக்கு பல்கலைக்கழ கத்தில் பி.எட்., இறுதி ஆண்டு படித்து வருகிறார். வீட்டில் நிலவும் பொருளாதார சூழ்நிலை காரணமாக, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, 'உணவு டெலிவரி' ஊழியராக பணியாற்றி வருகிறார்.

நேற்று அதிகாலை 4:30 மணியளவில் அத்துாரில் உள்ள சந்தோஷ் நகரில் உணவு டெலிவரி செய்த பின், தன் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கிருந்து இரு இளம் பெண்கள், இவரை பார்த்து இந்தியில் திட்டி உள்ளனர். அதற்கு பசவராஜும், 'எதற்காக என்னை திட்டுகிறீர்கள். எனக்கு இந்தி தெரியாது; கன்னடத்தில் பேசுங்கள்' என்றார்.

உடனே இரு இளம் பெண்களில் ஒருவர், யாருக் கோ போன் செய்தார். அதுபோன்று பசவராஜுவும், தனது நண்பர் அசோக்கை அழைத்தார். அசோக்கும், இரு சிறுவர்களும் அங்கு வந்தனர். இளம்பெண்கள் அழைத்த இரு வாலிபர்கள் அங்கு வந்து, நால்வருமாக சேர்ந்து பசவராஜ், அசோக்கை சரமாரியாக தாக்கினர்.

சாலை ஓரத்தில் இருந்த மரக்கட்டையால் அவர்களை தாக்கியதில் ரத்தம் கொட்டியது. இதையடுத்து நான்கு பேரும் அங்கிருந்து தப்பினர். படுகாயம் அடைந்த இருவரும், எலஹங்கா நியூடவுன் போலீசில் புகார் அளித்தனர். போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us