ADDED : மே 16, 2026 03:38 AM
அ நிறம் | அளவு
முல்பாகல்: முல்பாகலின், நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நிறுத்தி வைத்திருந்த, இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாகின.
முல்பாகலின் நேதாஜி விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியில் வாகனங்கள் நிறுத்தி வைக்கின்றனர். நேற்று இந்த இடத்தில் 20க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைத்திருந்தனர்.
சில விஷமிகள், ஒரு வாகனத்தை தீ வைத்து எரித்தனர். அந்த தீ, அருகிலிருந்த மேலும் மூன்று வாகனங்களுக்கு பரவி, அவையும் எரிந்தன.
உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு சிலர் தகவல் கொடுத்தனர். அவர்கள் தீயை அணைத்தனர். ஆனாலும் நான்கு வாகனங்களும் முழுமையாக எரிந்து நாசமாகின.
தீ விபத்து எப்படி நடந்தது. யார் தீ வைத்தது என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
