/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கார் - லாரி மோதல் 4 வாலிபர்கள் பலி
/
கார் - லாரி மோதல் 4 வாலிபர்கள் பலி
ADDED : ஜன 12, 2026 06:50 AM
சித்ரதுர்கா: காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், நான்கு வாலிபர்கள் உடல் நசுங்கி இறந்தனர்.
சித்ரதுர்கா ஹிரியூர் தாலுகா ஹிந்த்சகட்டே கிராமம் வழியாக செல்லும், பீதர் - ஸ்ரீரங்கப்பட்டணா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 2:00 மணிக்கு ஒரு கார் சென்றது. டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி, எதிரே வந்த லாரியின் முன்பக்கம் மோதியது.
விபத்து குறித்து லாரி டிரைவர், ஹரியூர் ரூரல் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.அங்கு வந்த போலீசார், வாகன ஓட்டிகள் உதவியுடன் காருக்குள் இருந்தவர்களை மீட்க முயன்றனர். இடிபாடுகளில் சிக்கி காரில் பயணம் செய்த, நான்கு பேரும் உடல்நசுங்கி இறந்தது தெரிந்தது.
விசாரணையில் உயிரிழந்தவர்கள், ஹிரியூர் தாலுகா நஞ்சயனகொட்டிகே கிராமத்தின் விஸ்வநாத், 22; நஞ்சுண்டி, 23; ராகுல், 23; யஷ்வந்த், 22; என்பது தெரிந்தது. நண்பர்களான நான்கு பேரும் ஹிரியூர் சென்று விட்டு ஊருக்கு திரும்பிய போது விபத்து நடந்தது தெரியவந்தது.

