ADDED : ஜூலை 26, 2025 05:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடகு: வேகமாக சென்ற லாரி, கார் மீது மோதியதில் நான்கு வாலிபர்கள் உயிரிழந்தனர்.
குடகு மாவட்டம், மடிகேரி தாலுகாவின், தேவரகொல்லி கிராமத்தின் அருகில், நேற்று மதியம் 12:50 மணியளவில், கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. எதிரே வந்த லாரி மோதியது. மோதிய வேகத்தில், காரின் முன்பகுதி நொறுங்கியது. காரில் பயணம் செய்த நிஹாத், 25, ரிஸ்வான், 22, ராகிப், 22, ரிஷு, 24, ஆகியோர் உயிரிழந்தனர்.
இருவர் சம்பவ இடத்திலும், மற்ற இருவர் மருத்துவமனையிலும் இறந்தனர். நால்வரும் குடகு மாவட்டத்தின், கோணிகொப்பலுவை சேர்ந்தவர்கள். இவர்கள் மடிகேரியில் இருந்து, சுள்ளியாவுக்கு காரில் சென்றபோது, விபத்து நடந்துள்ளது. இச்சம்பவத்தால், சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மடிகேரி ஊரக போலீசார், போக்குவரத்தை சரி செய்தனர்.