UPDATED : நவ 08, 2026 12:00 AM
ADDED : நவ 07, 2026 09:24 PM
யாத்கிர்: சாலையில் சென்று கொண்டிருந்த கார், கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், நான்கு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
யாத்கிர் மாவட்டம், ஷஹாபுரா தாலுகாவின், இப்ராகிம் டிபிஎல் கேம்ப் அருகில் உள்ள, சென்னை – சூரத் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 11:30 மணியளவில், ஒரு கார் அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரத்தில் இருந்த சுவற்றில் மோதியது.
மோதிய வேகத்தில் கார் நொறுங்கியதில், அதில் பயணித்த குருராஜ் சவுஹான், 35, ரெட்டி ராத்தோட், 33, கோவிந்த சவுஹான், 28, குமார் ராத்தோட், 26, ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இறந்தவர்களில் மூவர், மல்தார் தான்டாவை சேர்ந்தவர்கள். மற்றொருவர் லிங்கேரியை சேர்ந்தவர்.
நால்வரும், ஜேவர்கியில் இருந்து யாத்கிருக்கு காரில் செல்லும் போது, விபத்து நடந்துள்ளது. விபத்துக்கு அதிவேகமே காரணம் என்பது தெரிய வந்துள்ளது. தகவலறிந்து வந்த ஷஹாபுரா போலீசார், உடல்களை மீட்டனர்.
