தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/தர்ஷனுக்கு ‘பிசியோதெரபி’ சிகிச்சை விசாரணை நீதிமன்றம் அனுமதி

தர்ஷனுக்கு ‘பிசியோதெரபி’ சிகிச்சை விசாரணை நீதிமன்றம் அனுமதி

தர்ஷனுக்கு ‘பிசியோதெரபி’ சிகிச்சை விசாரணை நீதிமன்றம் அனுமதி


UPDATED : நவ 08, 2026 12:00 AM

ADDED : நவ 07, 2026 09:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2026 12:00 AM ADDED : நவ 07, 2026 09:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: முதுகு வலியால் அவதிப்படும் நடிகர் தர்ஷனுக்கு, சிறைக்குள், ‘பிசியோதெரபி’ சிகிச்சை அளிக்க, நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் சிறையில் உள்ள நடிகர் தர்ஷன், கடந்த சில நாட்களாக முதுகு வலியால் அவதிப்பட்டு வருகிறார். தனக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யும்படி சிறை அதிகாரிகளிடம் முறையிட்டு உள்ளார். அதற்கு அவர்கள், நீதிமன்ற அனுமதி இல்லாமல், சிகிச்சை அளிக்க முடியாது என்று மறுத்துவிட்டனர்.

இதையடுத்து, முதுகு வலிக்கு பிசியோதெரபி சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என்று, 59வது கூடுதல் நகர உரிமையியல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் தர்ஷன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிமன்றத்தில் தர்ஷன் தரப்பு வக்கீல் வாதிடுகையில், ‘தர்ஷன் கடந்த சில ஆண்டுகளாக முதுகு வலியால் அவதிப்பட்டு வருகிறார். இவ்வழக்கில் அவர் கைது செய்யப்பட்டபோது, இதே பிரச்னை தொடர்பாக பிசியோ தெரபி சிகிச்சை எடுத்து கொண்டனர். எனவே, இம்முறை அவருக்கு சிறையிலேயே சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும்’ என்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வக்கீல், ‘முதுகு வலி என்று கூறி, கடந்த முறை ஜாமின் பெற்றார். இதன் மூலம் அறுவை சிகிச்சை பெற்று கொள்வதாகவும் தெரிவித்தார். ஆனால் இதுவரை அதுபோன்று அறுவை சிகிச்சை எதுவும் நடக்கவில்லை. எனவே, இதையே காரணமாக கூறுகிறார்’ என்றார்.

இதையடுத்து, தர்ஷனுக்கு பரப்பன அக்ரஹாரா சிறையிலேயே பிசியொ தெரபி சிகிச்சை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us