தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/மூதாட்டியை கொன்றவர் கைது

மூதாட்டியை கொன்றவர் கைது

மூதாட்டியை கொன்றவர் கைது


UPDATED : நவ 08, 2026 12:00 AM

ADDED : நவ 07, 2026 09:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2026 12:00 AM ADDED : நவ 07, 2026 09:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கெங்கேரி: பணம் மற்றும் தங்க மோதிரத்துக்காக, மூதாட்டியை கொலை செய்தவர், போலீசாரிடம் சிக்கினார்.

ராம்நகர், பிடதியைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் நாராயணம்மா, 65. குடும்பத்தை விட்டு பிரிந்த இவர், பெங்களூரின், கெங்கேரியின், கோனசந்திராவில் தனியாக சாலையில் நடமாடியபடி, வாழ்க்கை நடத்தினார்.

அங்குள்ள கோவில் அருகில் அமர்ந்திருப்பார். கடந்த நான்கு நாட்களுக்கு முன், இவர் கோவில் அருகில் இறந்து கிடந்தார்.

தகவலறிந்து அங்கு வந்த போலீசார், மூதாட்டியின் உடலை மீட்டனர். முதலில் இயல்பான இறப்பு என, கருதப்பட்டது.

ஆனால் பிரேத பரிசோதனையில், அவர் கொலையானது தெரிந்தது. அதன்பின் விசாரணை நடத்தி ஒரு நபரை கைது செய்தனர்.

மூதாட்டி கோவில் அருகில் அமர்ந்திருந்த போது, அவரது கையில் தங்க மோதிரம், பணம் இருப்பதை பார்த்த அந்நபர், மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, மோதிரம், பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். கொலையாளி பற்றிய விபரங்களை, போலீசார் பகிரங்கப்படுத்தவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us