மாண்டியாவில் ஓராண்டில் 40 குழந்தை தொழிலாளர் மீட்பு
மாண்டியாவில் ஓராண்டில் 40 குழந்தை தொழிலாளர் மீட்பு
ADDED : மே 06, 2026 11:49 PM

மாண்டியா: 'மாண்டியாவில் கடந்த ஓராண்டில் 40 குழந்தை தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர்' என, மாவட்ட கலெக்டர் குமார் தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை:
மாண்டியாவில் ஹோட்டல் உள்ளிட்ட பல கடைகளில், குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்வதாக தகவல் கிடைத்தது. 2025 ஏப்ரல் முதல் கடந்த மார்ச் வரை குழந்தை தொழிலாளர்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், பஞ்சர் கடை, ஹோட்டல்களில் வேலை செய்த, 40 குழந்தை தொழிலாளர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீட்கப்பட்டனர்.
இவர்களை வேலைக்கு வைத்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது தொடர்பாக 26 வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளன.
குழந்தை தொழிலாளர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல இடங்களில் நாடகங்கள் நடத்தப்பட்டன. துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. குழந்தை திருமணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
