sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சட்டவிரோதமாக இயங்கிய 40 ரிசார்ட்டுகளுக்கு 'சீல்'

 சட்டவிரோதமாக இயங்கிய 40 ரிசார்ட்டுகளுக்கு 'சீல்'

 சட்டவிரோதமாக இயங்கிய 40 ரிசார்ட்டுகளுக்கு 'சீல்'


ADDED : பிப் 27, 2026 05:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2026 05:32 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொப்பால்: கங்காவதியில் சட்ட விரோதமாக இயங்கி வந்த ரிசார்ட்களில், நேற்று அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர்; 40க்கும் மேற்பட்ட ரிசார்ட்டுகளுக்கு சீல் வைத்தனர்.

கொப்பால் மாவட்டம் கங்காவதிக்கு, கடந்தாண்டு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண்ணும், ரிசார்ட் ஒன்றின் பெண் உரிமையாளரும், அதே பகுதியை சேர்ந்த மூவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். தடுக்க வந்த வெளிநாட்டு பிரஜை உட்பட மூவரை ஆற்றில் தள்ளிவிட்டனர். இதில், ஒருவர் நீரில் மூழ்கி பலியானார்.

இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய நீதிமன்றம், குற்றவாளிகள் மூவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்நிலையில், கங்காவதியின் பசபுரா, ஆனேகொந்தி, சனபுராவில், ஜெஸ்காம், வருவாய், பஞ்சாயத்துராஜ் மற்றும் கலால் துறை அதிகாரிகள், நேற்று ஒரே நேரத்தில் ரெய்டு நடத்தினர்.

பசபுராவில், 150 க்கும் மேற்பட்ட ரிசார்ட்டுகள் உள்ளன. இவற்றில், 98க்கும் மேற்பட்டவை சட்ட விரோதமாக இயங்கி வருவது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதேபோன்று கங்காவதியில், 50ல் 40 ரிசார்ட்கள் சட்ட விரோதமாக இயங்கி வந்துள்ளன.

இதையடுத்து, ஜெஸ்காம் ஊழியர், மின் இணைப்பை துண்டித்தார். அதுபோன்று குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. வருவாய் துறை அதிகாரிகள், 138 சட்ட விரோத ரிசார்ட்டுகளில், 40க்கு உடனடியாக 'சீல்' வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us