ADDED : ஏப் 05, 2026 04:29 AM

உத்தர கன்னடா: இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
உத்தர கன்னடா மாவட்டம் சிர்சி அருகே நெடுஞ்சாலையில், நேற்று ஹூப்பள்ளி நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
இதற்கு எதிர் திசையில் தனியார் பஸ் பயணியருடன் வந்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக, இரண்டு பஸ்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில், பஸ்சில் இருந்த, 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இரண்டு பஸ்களின் முன்புறமும் சேதம் அடைந்தது.
இதைப்பார்த்த வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் முயற்சியில், போலீசாருடன் சேர்ந்து ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் சிக்கிய பஸ்கள் சாலை ஓரமாக அப்புறப்படுத்தப்பட்டன. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சிர்சி டி.எஸ்.பி., கீதா பாட்டீல் கூறியதாவது:
விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. பஸ்கள் அதிவேகமாக வந்ததே காரணமாக இருக்கலாம் என, கருதப்படுகிறது. வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. பஸ்சின் முன்புறத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
