sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

40 லட்சம் லிட்டர் குடிநீர் தொட்டி புலிகேசி நகரில் சிவகுமார் பூமி பூஜை

/

40 லட்சம் லிட்டர் குடிநீர் தொட்டி புலிகேசி நகரில் சிவகுமார் பூமி பூஜை

40 லட்சம் லிட்டர் குடிநீர் தொட்டி புலிகேசி நகரில் சிவகுமார் பூமி பூஜை

40 லட்சம் லிட்டர் குடிநீர் தொட்டி புலிகேசி நகரில் சிவகுமார் பூமி பூஜை


ADDED : மே 13, 2025 01:00 AM

Google News

ADDED : மே 13, 2025 01:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புலிகேசி நகர் ''பெங்களூரு நகர மக்களுக்கு தேவையான சுத்தமான குடிநீரை வழங்குவதில் உறுதியாக இருக்கிறோம்,'' என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.

பெங்களூரு புலிகேசி நகரில், குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய 2.50 லட்சம் மக்களுக்காக, 40 லட்சம் லிட்டர் தண்ணீர் சேமிக்கும் வகையில் நிலத்தடியில் குடிநீர்த் தொட்டி கட்டும் பணிக்கான பூமி பூஜையை, துணை முதல்வர் சிவகுமார் நேற்று துவக்கி வைத்து பேசியதாவது:

பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், புலிகேசி நகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சகாயபுரம், பில்லண்ணா கார்டன் வார்டில் 27.45 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர்த் தொட்டி கட்டப்பட உள்ளது.

மொத்தம் 40 லட்சம் லிட்டர் தண்ணீர் தேக்கி வைக்கத்தக்கதாக இருக்கும். 30,000 வீடுகளில் வசிக்கும் 2.50 லட்சம் பேருக்கு குடிநீர் வசதி கிடைக்கும். இத்தொகுதி மேம்பாட்டுப் பணிகளுக்கு 1,055 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்தொகுதியில் சாலை அமைக்க 130 கோடி ரூபாய்; மேம்பாலத்துக்கு 42 கோடி ரூபாய்; வார்டு மேம்பாட்டுக்கு 320 கோடி ரூபாய் செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இத்தொகுதியில் நிலம் இருப்பதாக எம்.எல்.ஏ., தெரிவித்தால், புதிதாக பள்ளி கட்டடம் கட்டித்தரப்படும். இது தவிர மருத்துவமனை கட்டவும் மாநகராட்சி நிலம் தேடி வருகிறது.

பெங்களூரு நகர மக்களுக்கு தேவையான சுத்தமான குடிநீர் வழங்குவதில் உறுதியாக இருக்கிறோம். இதன் பலனாகவே, 'சஞ்சாரி காவிரி மற்றும் சரளா காவிரி' திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மொபைல் டேங்கர்கள் மூலம், நகர மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

நெலமங்களா, கோலாரில் உள்ள ஏரிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சிறிய வீட்டில் வசிப்போர், காவிரி குடிநீர் இணைப்பை பெற, 1,000 ரூபாய் செலுத்தினாலே போதுமானது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின், காவிரி ஐந்தாவது திட்டப்பணிகள் மூலம் கூடுதலாக 6 டி.எம்.சி., தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இதன் மூலம் அடுத்த 30 - 40 ஆண்டுகளுக்கு பெங்களூரு மக்களுக்கு குடிநீர் வினியோகிக்க முடியும்.

பெங்களூரு முழுதும் கழிவு மேலாண்மைக்காக, 'துாய்மை பெங்களூரு' உதவி எண், விரைவில் அறிமுகம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் கூறியதாவது:

இத்தொகுதியில் ஆறு வார்டுகளில் 3.50 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். 57 குடிசை பகுதிகளில் 27 ஆயிரம் வீடுகள் உள்ளன. தினமும் 20 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

ஒவ்வொரு நபருக்கும் சராசரியாக 70 லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது. புதிய நீர்தேக்கம், புதிய குழாய்கள் அமைக்கப்பட்ட பின், தினமும் கூடுதலாக 10 மில்லியன் லிட்டர் சுத்தமான காவிரி குடிநீர் கிடைக்கும். இதன் மூலம் இங்கு வசிப்போரின் ஆரோக்கியமும், வாழ்க்கை தரமும் மேம்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், புலிகேசி நகர் எம்.எல்.ஏ., சீனிவாஸ், சிவாஜி நகர் எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத், முன்னாள் மேயர் சம்பத்ராஜ், முன்னாள் கவுன்சிலர் ஜாகிர், பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் மகேஷ்வர் ராவ் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us