/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
41,000 குழந்தைகளுக்கு கர்நாடகாவில் இதய பாதிப்பு
/
41,000 குழந்தைகளுக்கு கர்நாடகாவில் இதய பாதிப்பு
ADDED : அக் 25, 2025 11:02 PM
பெங்களூரு: கர்நாடகாவில் 41,000 குழந்தைகள், சிறிய அளவிலான இதய நோய் குறைபாடுகளுடன் வாழ்ந்து வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை:
கருவில் இருக்கும்போதே சில குழந்தைகளுக்கு இதயம் அல்லது ரத்த நாளங்களில் அசாதாரண வளர்ச்சி ஏற்படுகிறது. இதனால், இதயத்தில் சிறிய அளவிலான துளைகள் ஏற்படுகின்றன. இது போன்று இதய குறைபாடுகளுடன் கர்நாடகாவில் ஐந்து வயதுக்கு உட்பட்ட 41,000 குழந்தைகள் உள்ளனர்.
'ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்தய காரியக்ரம்' எனும் திட்டத்தின் கீழ் பரிசோதனை மேற்கொண்டதில், 41,000 குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இந்த குழந்தைகளுக்கு 'ஆயுஷ்மான் பாரத் ஆரோக்கிய கர்நாடகா' திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைக்க முடியும். ஏனெனில், நோயை கண்டறிந்து சிகிச்சை பெற தாமதமானால், உயிரிழக்கும் அபாயமும் ஏற்படலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

