பாங்காக்கில் இருந்து பெங்களூருக்கு கடத்தப்பட்ட 47 விலங்குகள் பறிமுதல்
பாங்காக்கில் இருந்து பெங்களூருக்கு கடத்தப்பட்ட 47 விலங்குகள் பறிமுதல்
ADDED : மே 16, 2026 03:32 AM

பெங்களூரு: தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் இருந்து, பெங்களூருக்கு கடத்தப்பட்ட ஆப்ரிக்க ஆமை குட்டிகள் உட்பட, 47 வன விலங்குகளை கெம்பே கவுடா சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நாட்டில் அதிக பயணியர் வந்து செல்லும் இடத்தில் பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம் அமைந்து உள்ளது.
அதேவேளையில், போதைப் பொருட்கள், தங்கம், வன விலங்குகள் சட்ட விரோதமாக கடத்துவதும் அதிகரித்து உள்ளது.
தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் இருந்து பெங்களூருக்கு, வன விலங்குகள் கடத்தப்படுவதாக, சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, நேற்று முன்தினம், தாய்லாந்தில் இருந்து வந்த விமானத்தில், குறிப்பிட்ட சில பயணியரின் உடமைகளை சோதனை செய்தனர்.
அப்போது, சிவப்பு பாத ஆமைகள், ஆப்ரிக்க ஆமைகள், அரிய வகை குரங்குகள் உட்பட, 47 வன விலங்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த நபர் மீது சுங்க சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், பெங்களூரு கிராமப்புற வன விசாரணை ஆணையத்திடம் விசாரணைக்காக அவர் ஒப்படைக்கப்பட்டார்.
