தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சிறுமி பலாத்கார வழக்கில் 48 வயது நபருக்கு '20 ஆண்டு'

 சிறுமி பலாத்கார வழக்கில் 48 வயது நபருக்கு '20 ஆண்டு'

 சிறுமி பலாத்கார வழக்கில் 48 வயது நபருக்கு '20 ஆண்டு'


ADDED : ஜூலை 26, 2026 11:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 26, 2026 11:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உத்தரகன்னடா: உத்தர கன்னடா மாவட்டம், குமட்டா தாலுகாவின், ஹொசகட்டா கிராமத்தில், 48 வயதான நபர் வசிக்கிறார்.

இவர் இதே கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை, 2022ல் பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, அந்த நபரை குமட்டா போலீசார் கைது செய்தனர்.

அவர் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவானது. விசாரணையை முடித்த போலீசார், உத்தர கன்னடா மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். வழக்குக்கு தேவையான அனைத்து சாட்சிகள், ஆதாரங்களையும் சமர்ப்பித்தனர்.

நீதிமன்ற விசாரணையில், நபரின் குற்றம் உறுதியானதால், அவருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி பிரதிபா பன்டூரராவ் குல்கர்னி, நேற்று முன் தினம் தீர்ப்பளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us