தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வங்கதேச தம்பதியை தாக்கிய டாக்டர் கைது

 வங்கதேச தம்பதியை தாக்கிய டாக்டர் கைது

 வங்கதேச தம்பதியை தாக்கிய டாக்டர் கைது


ADDED : ஜூலை 26, 2026 11:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 26, 2026 11:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெல்லந்துார்: வங்கதேச தம்பதியை தாக்கிய, டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வங்கதேசத்தை சேர்ந்தவர் முகமது பிலால், 24. இவரது மனைவி நஸ்ரினா, 23. இவர்கள், பெங்களூரு பெல்லந்துார் ஹதேசித்தாபுராவில் வசிக்கின்றனர். கடந்த, 22ம் தேதி இரவு, தம்பதி வெளியே சென்று விட்டு வீட்டிற்கு நடந்து சென்றனர். அவர்களை வழிமறித்த ஒருவர், ஹிந்தியில் ஆவேசமாக பேசி, சரமாரியாக தாக்கினார்.

இதுகுறித்து முகமது பிலால் அளித்த புகாரில், பெல்லந்துார் போலீசார் விசாரித்தனர். தம்பதியை தாக்கிய டாக்டரான நாகேந்திரா, 55, என்பவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், இந்தியாவில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் வங்க தேசத்தினரால் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இதனால் கோபத்தில் வங்கதேச தம்பதியை தாக்கியதாக கூறினார்.

ஆனால், 'எங்கள் குடும்பம், பல ஆண்டுகளாக பெங்களூரில் வசிக்கிறது. நான் பிறந்ததில் இருந்தே இங்கு தான் வசிக்கிறேன். சட்ட விரோதமாக இங்கு வசிக்கவில்லை' என்று முகமது பிலால் கூறியுள்ளார்.

தாக்குதலுக்கு ஆளான தம்பதி வங்கதேசத்தினர் தான் என்பதை போலீசாரும் உறுதி செய்துள்ளனர். ஆனாலும் அவர்கள் சட்ட விரோதமாக தங்கி இருந்தனரா என விசாரணை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us