தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ரூ.11 கோடி போதை பறிமுதல் பெங்களூரில் 5 பேர் கைது

 ரூ.11 கோடி போதை பறிமுதல் பெங்களூரில் 5 பேர் கைது

 ரூ.11 கோடி போதை பறிமுதல் பெங்களூரில் 5 பேர் கைது


ADDED : மார் 25, 2026 06:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2026 06:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரில் மூன்று இடங்களில் நடத்திய சோதனையில், 11 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன; ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் நேற்று அளித்த பேட்டி:

பெங்களூரு நாயண்டஹள்ளியில், ஒரு வீட்டில் போதை பொருள் பதுக்கி விற்பனை செய்வதாக, சி.சி.பி., போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த வீட்டில் சோதனை நடத்திய போது, 3 கிலோ மெத்ஆம் பெட்டமைன், 343 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு, 3.57 கோடி ரூபாய்.

போதை பொருள் பதுக்கி வைத்திருந்த, குடகின் சோமவார்பேட்டின் ரவிகுமார் கைது செய்யப்பட்டார்.

ஆந்திராவில் இருந்து கஞ்சா, போதை பொருள் வாங்கி வரும் ரவிகுமார், நாயண்டஹள்ளியில் உள்ள வீட்டில் பதுக்கி, சரக்கு வாகனத்தில் காய்கறி மூட்டைகளுக்கு இடையில் மறைத்து எடுத்துச் சென்று, மாண்டியா, மலவள்ளி, சாம்ராஜ்நகர் பகுதிகளில் விற்று உள்ளார்.

மற்றொரு சம்பவத்தில், மெஜஸ்டிக் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில், மெத்ஆம் பெட்டமைனை பதுக்கி, விற்பனை செய்த பீதர் மாவட்டம் பசவகல்யாணை சேர்ந்த கிரண், 32 என்பவரை, உப்பார்பேட் போலீசார் கைது செய்து, 7.60 கோடி ரூபாய் மதிப்பிலான, 4 கிலோ மெத்ஆம் பெட்டமைனை பறிமுதல் செய்தனர்.

காடுகோடி போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின்படி, சன்னசந்திரா சாலையில் கஞ்சா விற்பனை செய்த, ஒயிட்பீல்டின் மதீன் பாஷா, 27, பிடரஹள்ளியின் ராஜேஸ், 29, முகமது கவுஸ், 42 ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து, 12 லட்சம் மதிப்பிலான 11.70 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஒட்டு மொத்தமாக மூன்று சம்பவங்களிலும், 11.04 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us