/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வீட்டின் பின்புறம் 5 ராஜநாக குட்டிகள்
/
வீட்டின் பின்புறம் 5 ராஜநாக குட்டிகள்
ADDED : ஜூலை 02, 2025 07:32 AM

ஷிவமொக்கா :வீட்டின் பின்புறத்தில் ஐந்து ராஜநாக பாம்பு குட்டிகள் காணப்பட்டன.
ஷிவமொக்கா மாவட்டம், சத்னஹள்ளியை சேர்ந்தவர் சரண். இவரின் வீட்டின் பின்புறம் வளர்ந்திருந்த செடிகளின் மீது தார்பாலின் மூலம் மூடியிருந்தார். சில நாட்களுக்கு பின், தார்பாலினை அகற்றியபோது, ஆறு ராஜநாக பாம்பு குட்டிகள் இருந்தன.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், பாம்பு பிடிக்கும் ஸ்நேக் கிரணுக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த அவர், லாவகமாக ஐந்து குட்டிகளை பிடித்துவிட்டார். ஒரு குட்டி தப்பிவிட்டது.
சரண் வீட்டின் பின்புறம் புதர்களாக உள்ளன. இப்பகுதியில் யாரும் அவ்வளவாக வராததால், பாம்பு முட்டையிட்டு உள்ளது. தற்போதைய சீதோஷ்ண நிலையால், பாம்புகள் தஞ்சம் அடைந்துள்ளன. குட்டி மட்டுமே கிடைத்துள்ளன; அதன் தாய் பாம்பு இல்லை.
பாம்பை பார்த்தால் தனக்கு தகவல் தெரிவிக்கும்படி கூறிய கிரண், குட்டிகளை பாதுகாப்பான பகுதியில் சென்றுவிட்டார்.