/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மைசூரு தசரா விழா 25ல் 5 யானை வருகை
/
மைசூரு தசரா விழா 25ல் 5 யானை வருகை
ADDED : ஆக 19, 2025 02:46 AM

மைசூரு : மைசூரு தசராவில் கலந்து கொள்வதற்காக, இரண்டாம் கட்டமாக ஐந்து யானைகள், வரும் 25ம் தேதி மைசூரு வருகின்றன.
மைசூரு தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்க, அம்பாரி சுமக்கும் அபிமன்யு உட்பட 9 யானைகள் முதல்கட்டமாக, மைசூரு வந்துள்ளன. அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளன. தினமும் நடைபயிற்சி, சத்தான உணவு அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், இரண்டாம் கட்டமாக வரும் 25ம் தேதி, ஸ்ரீகண்டா, ரூபா, சுக்ரீவர், ஹேமாவதி, கோபி என, ஐந்து யானைகள் முகாம்களில் இருந்து, மைசூருக்கு அழைத்து வரப்படுகின்றன. இந்த யானைகளுக்கும் உடல்தகுதி பரிசோதனை செய்யப்பட்ட பின், நடைபயிற்சி அளிக்கப்படும் என, வனப்பாதுகாப்பு அதிகாரி பிரபு கவுடா நேற்று கூறினார்.