/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காதலன் குடும்பத்தின் 5 பேர் கொலை; காதலி தந்தை, இருவருக்கு மரண தண்டனை இரு பெண்கள் உட்பட 9 பேருக்கு ஆயுள் சிறை
/
காதலன் குடும்பத்தின் 5 பேர் கொலை; காதலி தந்தை, இருவருக்கு மரண தண்டனை இரு பெண்கள் உட்பட 9 பேருக்கு ஆயுள் சிறை
காதலன் குடும்பத்தின் 5 பேர் கொலை; காதலி தந்தை, இருவருக்கு மரண தண்டனை இரு பெண்கள் உட்பட 9 பேருக்கு ஆயுள் சிறை
காதலன் குடும்பத்தின் 5 பேர் கொலை; காதலி தந்தை, இருவருக்கு மரண தண்டனை இரு பெண்கள் உட்பட 9 பேருக்கு ஆயுள் சிறை
ADDED : ஏப் 09, 2025 07:30 AM

ராய்ச்சூர் : காதலன் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், காதலியின் தந்தை உட்பட மூன்று பேருக்கு மரண தண்டனையும், ஒன்பது பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து, மூன்றாவது கூடுதல் மாவட்டம், செஷன்ஸ் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனுாரின் சுகலபேட்டையை சேர்ந்தவர் ஈரப்பா. இவரின் மகன் மவுனீசும், அதே பகுதியை சேர்ந்த சன்ன பக்கீரப்பா மகள் மஞ்சுளாவும் காதலித்து வந்தனர்.
இந்த காதலை பெற்றோர் ஏற்க மறுத்தனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொண்டனர். இதனால் இரு குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது.
கடந்த 2020 ஜூலை 11ம் தேதி மாலையில், மவுனீஷ் வீட்டுக்குள் மஞ்சுளாவின் தந்தை, அவரது சகோதரர்கள், உறவினர்கள் அத்துமீறி நுழைந்தனர்.
வீட்டில் இருந்த மவுனீஷ் தந்தை ஈரப்பா, அவரது தாய் சுமித்ரம்மா, சகோதரர்கள் நாகராஜ், ஹனுமேஷ், சகோதரிகள் ஸ்ரீதேவி, தாயம்மா, அண்ணி ரேவதி ஆகியோரை அரிவாள், கோடாரியால் தாக்கினர்.
இதில் ஈரப்பா, சுமித்ரம்மா, நாகராஜ், ஹனுமேஷ், ஸ்ரீதேவி ஆகிய ஐந்து பேரும் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த தாயம்மா, ரேவதி ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
மாநிலம் முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொடூர சம்பவத்தில், மஞ்சுளாவின் தந்தை சன்ன பக்கீரப்பா, அம்பண்ணா, சோமசேகர், ரேகா, கங்கம்மா, தொட்ட பக்கீரப்பா, ஹனுமந்தா, ஹன்னுரப்பா, பசலிங்கப்பா, அமரேஷ், சிவராஜ், பிரசப்பா ஆகிய 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கு சிந்தனுாரில் மூன்றாவது கூடுதல் மாவட்டம், செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி ஜகடி முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது. இரு தரப்பு வாதங்களும் முடிந்த பின், நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேரும் குற்றவாளிகள். அனைவர் மீதான குற்றச்சாட்டுக்களும் நிரூபணமாகி உள்ளது. சன்ன பக்கீரப்பா, அம்பண்ணா, சோமசேகர் ஆகியோருக்கு மரண தண்டனையும்; மூவரும் தலா 47,000 ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டும்.
ரேகா, கங்கம்மா, தொட்ட பக்கீரப்பா, ஹனுமந்தா, ஹன்னுரப்பா, பசலிங்கப்பா, அமரேஷ், சிவராஜ், பிரசப்பா ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ஒன்பது பேரும் தலா 97,500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

