தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ராம்நகர் நகராட்சி கவுன்சிலரை கொல்ல முயன்ற 5 பேர் கைது

 ராம்நகர் நகராட்சி கவுன்சிலரை கொல்ல முயன்ற 5 பேர் கைது

 ராம்நகர் நகராட்சி கவுன்சிலரை கொல்ல முயன்ற 5 பேர் கைது


ADDED : ஏப் 06, 2026 04:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2026 04:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராம்நகர்: ராம்நகர் நகராட்சி கவுன்சிலரை கொல்ல முயன்ற வழக்கில், ஐந்து பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ராம்நகர் நகராட்சியில் கவுன்சிலராக இருப்பவர் அஸ்மத் உல்லா கான். ரவுடியான இவர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். கடந்த மாதம் 27 ம் தேதி மாலை ஸ்கூட்டரில் சென்ற அஸ்மத்தை, இரண்டு பைக்கில் வந்த 5 பேர் கும்பல், அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றனர்.

கும்பலிடம் இருந்து தப்பித்த அவர் தர்காவுக்குள் ஓடி உயிர் தப்பினார். அஸ்மத் தப்பியதால் கோபத்தில் அவரது வீட்டிற்கு சென்ற கும்பல் அங்கிருந்த பைக், கார்களை சேதப்படுத்தி விட்டு தப்பினர். இதுகுறித்து அஸ்மத் அளித்த புகாரில் ராம்நகர் போலீசார் விசாரித்தனர்.

இந்த வழக்கில் பெங்களூரில் தலைமறைவாக இருந்த, ராம்நகரின் ரகுமானியா நகரின் பர்ஹத், துபைல் கான், அர்பாஸ் பாஷா, சையத் சாஹில், ஹைதர் ஆகிய 5 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். திருமணம் ஆன பர்ஹத்தின் தங்கையை, அஸ்மத் துன்புறுத்தியதால் அவரை கொல்ல முயன்றது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us