/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கன்னட நாள் கொண்டாட்டம் பெலகாவியில் 5 பேருக்கு கத்திக்குத்து
/
கன்னட நாள் கொண்டாட்டம் பெலகாவியில் 5 பேருக்கு கத்திக்குத்து
கன்னட நாள் கொண்டாட்டம் பெலகாவியில் 5 பேருக்கு கத்திக்குத்து
கன்னட நாள் கொண்டாட்டம் பெலகாவியில் 5 பேருக்கு கத்திக்குத்து
ADDED : நவ 03, 2025 04:48 AM
பெலகாவி: பெலகாவியில் நடந்த கன்னட நாள் கொண்டாட்டத்தில் ஐந்து பேரை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கன்னட ராஜ்யோத்சவ தின கொண்டாட்டங்கள் நேற்று முன்தினம் பெலகாவியில் நடந்தன. இந்த கொண்டாட்டங்களை கண்டித்து, மராத்தியர்கள் கருப்பு உடை அணிந்து பேரணி நடத்தினர். இதனால், பெலகாவியில் பதற்றமான சூழல் நிலவியது.
நேற்று முன்தினம் இரவு சதாசிவநகரில் உள்ள லட்சுமி வளாகத்தில் விழா கொண்டாட்டங்கள் நடந்தன. அப்போது, கூட்டத்தில் புகுந்த சில மர்ம நபர்கள், அங்கிருந்த சிலரை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றனர். இதனால் பதற்றம் நிலவியது.
காயம் அடைந்தவர்கள், பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து ஏ.பி.எம்.சி., போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், பெலகாவி போலீஸ் கமிஷனர் பூஷண் ஜி போராஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்றார். சிகிச்சையில் இருப்பவர்களை பார்வையிட்டு, அவர்களிடம் விசாரித்தார். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்தினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மீதமுள்ள இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் நேற்று கூறியதாவது:
பெலகாவி நேரு நகர் பகுதியை சேர்ந்த குருநாத் வக்குந்த், சச்சின் காம்ப்ளே, லோகேஷ் பெடகேரி, மகேஷ் விநாயக், நசீர் பதான் ஆகிய ஐந்து பேர் கத்திக்குத்தில் காயம் அடைந்து உள்ளனர். இவர்களின் முதுகு, வயிற்றுப்பகுதியில் கத்தியால் மர்ம நபர்கள் குத்திவிட்டு தப்பி ஓடி உள்ளனர்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் மர்ம நபர்களை கண்டுபிடிப்பது கடினமான காரியமாக உள்ளது. எனினும் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் வெளியூரை சேர்ந்தவர்களாக இருப்பர் என சந்தேகிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

