/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முதல்வர் மாற்றம் பற்றி தெரிவித்தது யார்? ஊடகங்கள் மீது அமைச்சர் பைரதி சுரேஷ் பாய்ச்சல்
/
முதல்வர் மாற்றம் பற்றி தெரிவித்தது யார்? ஊடகங்கள் மீது அமைச்சர் பைரதி சுரேஷ் பாய்ச்சல்
முதல்வர் மாற்றம் பற்றி தெரிவித்தது யார்? ஊடகங்கள் மீது அமைச்சர் பைரதி சுரேஷ் பாய்ச்சல்
முதல்வர் மாற்றம் பற்றி தெரிவித்தது யார்? ஊடகங்கள் மீது அமைச்சர் பைரதி சுரேஷ் பாய்ச்சல்
ADDED : நவ 03, 2025 04:48 AM

கோலார : முதல்வராக டி.கே.சிவகுமார், நவம்பர் 21ல் பதவி ஏற்பாரா என்ற நிருபரின் கேள்விக்கு, கோலார் மாவட்ட பொறுப்பு அமைச்சர் பைரதி சுரேஷ் கடும் கோபம் அடைந்து, ஊடகங்கள் தான் பெரிது படுத்தி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர், என்றார்.
கோலாருக்கு நேற்று வருகை தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சரான பைரதி சுரேஷ், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒரு செய்தியாளர், 'முதல்வராக டி.கே.சிவகுமார், நவம்பர் 21 ல் பதவி ஏற்பாரா' என்று கேட்டார்.
நாங்கள் அல்ல இதனால் கோபம் அடைந்த அவர், ''டி.கே.சிவகுமார், முதல்வர் பதவி ஏற்பதாக ஏதாவது சொன்னாரா'. முதல்வர்  மாற்றம் பற்றிய பிரச்னையை உருவாக்கி வருவது நாங்கள் அல்ல; ஊடகங்கள் தான். முதல்வர் மாற்றப்படுவார் என்று யார், எப்போது சொன்னார்கள். அப்படியொரு பதிவு இருந்தால் காட்டுங்கள். பொறுப்பான பதவியில் இருக்கும் எங்களின் வழிகாட்டிகளான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல், கே.சி.வேணுகோபால் ஏதாவது கூறினீர்களா; யாராவது தேதி நிர்ணயித்தனரா.
''நாங்கள் அனைவரும் கட்டுப்பாடு உள்ள காங்கிரசை சேர்ந்தவர்கள். முதல்வர், துணை முதல்வர் மற்றும் உயர்மட்ட குழு சொல்வதை தான் நாங்கள் கேட்கிறோம். அமைச்சரவை விரிவாக்கம் குறித்து உயர்மட்ட குழு தான் முடிவு செய்யும்,'' என்று பொரிந்து தள்ளினார்.
இதன் பின் அவர் அளித்த பேட்டி:
கன்னட ராஜ்யோத்சவா கொண்டாட்டத்தை எம்.இ.எஸ்., அமைப்பினர் கருப்பு தினமாக அனுஷ்டித்தனர். கன்னடத்தை எதிர்க்க, அவர்களுக்கு என்ன தகுதி, உரிமை இருக்கிறது.
கர்நாடகாவில் அவர்கள் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒரு கருப்பு தினத்தை கடைபிடிக்க வேண்டும். கன்னடத்தை காட்டி கொடுக்கும் அவர்கள், இங்குள்ள நிலத்தையும், தண்ணீரையும் பயன்படுத்துகின்றனர். அதை நாங்கள் பொறுத்துக் கொள்ள முடியாது. பெலகாவியை எந்த காரணத்திற்காகவும் மஹாராஷ்டிராவிற்கு விட்டுக் கொடுக்க மாட்டோம்.
கன்னட பள்ளிகள் கர்நாடகாவில் கன்னட பள்ளிகள் மூடப்படாது. காலம் மாறும் போது, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கில மொழியில் படிக்க அனுப்புவதை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.
அரசுக்கு எந்த கன்னட பள்ளியையும் மூட விருப்பமில்லை. கன்னட பள்ளிகளில் படித்தவர்கள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், பொறியாளர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் என உயர்ந்த  நிலையில் உள்ளனர்.
கன்னட பள்ளிகளுக்கு தேவையான நிதி உதவி மற்றும் தரமான கல்வியை வழங்க அரசு தயாராக உள்ளது. இது தொடர்பாக நான் முயற்சிகளை மேற்கொள்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

