/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
18 கி.மீ., சுரங்கப்பாதை சாலை திட்டத்தை எதிர்த்து... கையெழுத்து இயக்கம்!; பெங்களூரு லால்பாக் பூங்காவில் பா.ஜ.,வினர் துவக்கம்
/
18 கி.மீ., சுரங்கப்பாதை சாலை திட்டத்தை எதிர்த்து... கையெழுத்து இயக்கம்!; பெங்களூரு லால்பாக் பூங்காவில் பா.ஜ.,வினர் துவக்கம்
18 கி.மீ., சுரங்கப்பாதை சாலை திட்டத்தை எதிர்த்து... கையெழுத்து இயக்கம்!; பெங்களூரு லால்பாக் பூங்காவில் பா.ஜ.,வினர் துவக்கம்
18 கி.மீ., சுரங்கப்பாதை சாலை திட்டத்தை எதிர்த்து... கையெழுத்து இயக்கம்!; பெங்களூரு லால்பாக் பூங்காவில் பா.ஜ.,வினர் துவக்கம்
ADDED : நவ 03, 2025 04:44 AM

பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல முயற்சிகள், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில், போக்குவரத்து நெரிசலை குறைக்க ஹெப்பால் முதல் சில்க் போர்டு வரை, 18 கி.மீ., துாரத்திற்கு 18,000 கோடி ரூபாய் செலவில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை துணை முதல்வர் சிவகுமார் கொண்டு வந்து உள்ளார்.
இந்த சுரங்கப்பாதை, லால்பாக் தாவரவயில் பூங்கா பகுதியில் வருவதாக திட்ட அறிக்கையில் கூறப்பட்டது.
ஆலோசனை இதனால், லால்பாக் பூங்காவிற்கு ஆபத்து என பா.ஜ.,வினர் போர்க்கொடி துாக்கி உள்ளனர். பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா, சுரங்கப்பாதை திட்டம் வீண் செலவு, போக்குவரத்து நெரிசல் குறையாது என கடுமையாக விமர்சித்தார்.
இது குறித்து சிவகுமாரை நேரில் சந்தித்து தன் கருத்துகளையும் எடுத்துரைத்தார். இதற்கு மாறாக 'ட்ராம் ரயில்' அமைப்பது, பஸ், மெட்ரோ ரயில் போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை அதிகரிப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.
இப்படி தொடர்ச்சியாக பா.ஜ.,வினர் மத்தியில் எதிர்ப்புகள் வந்ததால் கடுப்பான சிவகுமார், 'சுரங்கப்பாதை அமைக்கும் இடத்தை எதிர்க்கட்சி தலைவர் அசோக் தேர்ந்தெடுத்து கூறட்டும்' என விரக்தியில் கூறினார். ஆனாலும், திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன் என்று சிவகுமார், விடாப்பிடியாக இருக்கிறார்.
இந்நிலையில், சுரங்கப்பாதை சாலை திட்டத்தை எதிர்த்து, 'லால்பாக்கை காப்பாற்றுங்கள்... பெங்களூரை பாதுகாப்போம்' எனும் தலைப்பிலான கையெழுத்து இயக்கத்தை பா.ஜ.,வினர் நேற்று லால்பாக் பூங்காவில் துவக்கினர். இதில், எதிர்க்கட்சி தலைவர் அசோக், தேஜஸ்வி சூர்யா, மல்லேஸ்வரம் எம்.எல்.ஏ., அஸ்வத் நாராயணா உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இவர்கள், அங்கிருந்த மக்களிடம் சுரங்கப்பாதை திட்டத்தால் லால்பாக் பூங்காவிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் தங்கள் கையெழுத்துகளை அங்கு வைக்கப்பட்டிருந்த பலகையில் பதிவு செய்தனர்.
பணக்கார திட்டம் இதன்பிறகு அசோக் கூறியதாவது:
சுரங்கப்பாதை திட்டம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். நகரில் 70 சதவீதம் பேர் பைக்குகள் வைத்து உள்ளனர். வெறும் 12 சதவீதம் பேர் மட்டுமே கார் வைத்து உள்ளனர். அப்படி இருக்கையில் கார் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் சுரங்கப்பாதை அமைப்பது எந்த விதத்தில் நியாயம். இந்த பாதையில் செல்வதற்கே மாதம் 16 முதல் 20 ஆயிரம் ரூபாய் செலவிட வேண்டும். இது பணக்காரர்களுக்கான திட்டமாக உள்ளது.
இந்த திட்டத்தின் மதிப்பு, 'இஸ்ரோ'வின் மங்கள்யான் திட்டத்தை விட குறைவாகும். இந்த திட்டத்துக்காக யாரிடம் எவ்வளவு கோடி ரூபாய் கடன் வாங்க போகிறீர்கள். இதற்கான வட்டியை யார் செலுத்துவர்.
இது மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தும். இந்த திட்டத்தை பா.ஜ.,வினர் மட்டும் எதிர்க்கவில்லை; மாறாக, ஒட்டுமொத்த பெங்களூரு மக்களும் எதிர்க்கின்றனர் என்பதை மறக்க வேண்டாம்.
இத்திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மத்திய போக்குவ ரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசும் வகையிலான போலி வீடியோவை காங்கிரசார் பரப்பி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
* தீர்வு வேண்டும்
தேஜஸ்வி சூர்யாவுக்கு, தனக்கு அறிவு அதிகம் என நினைப்பு; தன்னை பெரிய தலைவர் என நினைத்து கொள்கிறார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு சென்று அங்குள்ளவர்களுக்கும் அறிவுரை வழங்குவார். அனைத்து பா.ஜ., தலைவர்களும் தங்கள் கார்களை விட்டுவிட்டு, மெட்ரோ ரயிலில் பயணம் செய்வரா. சுற்றுச்சூழல் மீது அக்கறை உள்ளதாக பா.ஜ., தலைவர்கள் நாடகம் போட வேண்டாம். இந்த திட்டத்திற்கு வேறு யோசனை இருந்தால் சொல்லுமாறு அசோக்கிடமே கூறி உள்ளேன். எனக்கு தீர்வு தான் வேண்டும்; காரணம் வேண்டாம்.
- சிவகுமார், துணை முதல்வர்
***

