/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சட்டவிரோத சொத்து பதிவு; 5 சார்-பதிவாளர் 'சஸ்பெண்ட்'
/
சட்டவிரோத சொத்து பதிவு; 5 சார்-பதிவாளர் 'சஸ்பெண்ட்'
சட்டவிரோத சொத்து பதிவு; 5 சார்-பதிவாளர் 'சஸ்பெண்ட்'
சட்டவிரோத சொத்து பதிவு; 5 சார்-பதிவாளர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜன 08, 2026 05:56 AM
பெங்களூரு: காவேரி 2 போர்ட்டலில் திருத்தம் செய்து 250 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை, சட்டவிரோதமாக பதிவு செய்த, ஐந்து சார்-பதிவாளர்க ள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
கர்நாடகாவில் சொத்துகளை பதிவு செய்ய, 'காவேரி 2 போர்ட்டல்' என்ற செயலியை, வருவாய் துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த செயலியில் திருத்தம் செய்து கடந்த 2024 டிசம்பர் 6ம் தேதியில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி வரை 250 கோடி ரூபாய் மதிப்பிலான 1,332 சொத்துகள் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டன.
இதுகுறித்து, 'ஸ்மார்ட் கவர்னன்ஸ்' மைய நிர்வாக இயக்குநர் அளித்த புகாரின்படி, வடக்கு பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர். பத்திரப்பதிவு துறை அதிகாரிகளும் இன்னொரு பக்கம் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், சொத்துகளை சட்டவிரோதமாக பதிவு செய்ததில், சார்-பதிவாளர்கள் ரவி சங்கன கவுடா, சதீஷ் குமார், ஸ்ரீதர், கிரிஷ் சந்திரா, பிரபாவதி ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. அவர்கள் 5 பேரும் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர்.

