/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்து 3 தொழிலாளர்கள் பலி
/
சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்து 3 தொழிலாளர்கள் பலி
சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்து 3 தொழிலாளர்கள் பலி
சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்து 3 தொழிலாளர்கள் பலி
ADDED : ஜன 08, 2026 05:57 AM

பெலகாவி: சர்க்கரை ஆலையில், பாய்லர் வெடித்ததில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
பெலகாவி மாவட்டம், பைலஹொங்களா தாலுகாவின், மரகும்பி கிராமத்தின் அருகில், 'இனாம்தார் சுகர்ஸ்' என்ற சர்க்கரை ஆலை உள்ளது. இது விக்ரம் இனாம்தாருக்கு சொந்தமானது. இவர் முன்னாள் அமைச்சர் இனாம்தாரின் மகன். நேற்று மதியம் 2:00 மணியளவில், சர்க்கரை ஆலையின் நம்பர் 1 பிரிவில், தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த பாய்லர் வெடித்தது. இதில் தொழிலாளர்கள் தீபக் முனவள்ளி, 31, சுதர்ஷன் பனோஷி, 25, அக்ஷய் ஜோபடே, 45, ஆகியோர் உயிரிழந்தனர். தீபக் முனவள்ளி, பைலஹொங்களாவின், நேசரகி கிராமத்தை சேர்ந்தவர். சுதர்ஷன் பனோஷி, கானாபுராவின், சிக்கமுனவள்ளி கிராமத்தை சேர்ந்தவர். அக்ஷய் ஜோபடே, ஜமகன்டியில் வசித்தவர்.
மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பலத்த தீக்காயங்கள் இருந்ததால், ஜீரோ டிராபிக் வசதியில், பைலஹொங்களாவில் இருந்து, பெலகாவி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
தகவலரிந்து வந்த பைலஹொங்களா போலீசார், பார்வையிட்டனர். எஸ்.பி., ராமராஜன், சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தார். பாய்லர் வெடிக்க என்ன காரணம் என்பது, தற்போதைக்கு தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

