தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்.,கில் நாசவேலையில் ஈடுபட சதி 5 பயங்கரவாதிகளுக்கு 7 ஆண்டு சிறை

 பெங்.,கில் நாசவேலையில் ஈடுபட சதி 5 பயங்கரவாதிகளுக்கு 7 ஆண்டு சிறை

 பெங்.,கில் நாசவேலையில் ஈடுபட சதி 5 பயங்கரவாதிகளுக்கு 7 ஆண்டு சிறை


ADDED : ஏப் 22, 2026 01:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2026 01:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரில் நாசவேலையில் ஈடுபட சதி திட்டம் தீட்டிய, ஐந்து பயங்கரவாதிகளுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, என்.ஐ.ஏ., நீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது.

பெங்களூரு ஆர்.டி.நகர் சுல்தான்பாளையாவில் உள்ள வீட்டில் வசித்த, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் பயங்கரவாதிகளான சையது சுகைல் கான், முகமது உமர், ஜாகித் தப்ரேஸ், சையது முதாசீர் பாஷா, முகமது பைசல் ரப்பானி ஆகியோரை, 2023 ம் ஆண்டு ஜூலை மாதம் 19 ம் தேதி, சி.சி.பி., போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஏழு துப்பாக்கிகள், இரண்டு சாட்டிலைட் போன்கள், நான்கு வாக்கு டாக்கிகள், 45 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

பெங்களூரில் கடந்த 2008 ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் நசீர், கைதான 5 பேரையும் பயங்கரவாதத்தில் ஈடுபட மூளைச்சலவை செய்ததும், கைதான 5 பேரும் பெங்களூரின் பல இடங்களில் நாச வேலைகளில் ஈடுபட சதி திட்டியதும் தெரியவந்தது.

தலைமறைவு இந்த வழக்கை என்.ஐ.ஏ., விசாரித்தது. இவ்வழக்கில் ஜுனைத் அகமது, சல்மான் கான் வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதை கண்டுபிடித்தனர்.

அவர்கள் இருவரும் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை பற்றி தகவல் கொடுப்போருக்கு, ஐந்து லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் என்.ஐ.ஏ., அறிவித்து உள்ளது.

இதற்கிடையில் கைதான 5 பேரும் பெங்களூரில் எப்படி எல்லாம், நாச வேலையில் ஈடுபட சதி திட்டம் தீட்டினர். குண்டுகளை எப்படி தயாரித்தனர் என்பது உள்ளிட்ட தகவல்களை திரட்டிய என்.ஐ.ஏ., அதிகாரிகள், பெங்களூரு என்.ஐ.ஏ., நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. ஐந்து பயங்கரவாதிகளுக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை; 48,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

தண்டனை விபரம் இதுபோல மங்களூரில் 2022 ம் ஆண்டு டிசம்பர் 17 ம் தேதி, பயங்கரவாதி ஷாரிக் ஆட்டோவில் எடுத்து சென்ற, குக்கர் குண்டு வெடித்த வழக்கில், மூன்றாவது குற்றவாளியான ஷிவமொக்காவின் அராபத், 2023 ம் ஆண்டு டில்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். பயங்கரவாதிகள் ஷாரிக், அரபாத், முனீர் அகமது, சையது யாசின் உட்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முனீர் அகமது, சையது யாசினுக்கு தலா ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி, என்.ஐ.ஏ., நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.

நேற்று நடந்த விசாரணையின் போது அரபாத்துக்கும் ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஷாரிக் உட்பட 9 பேருக்கு, 23 ம் தேதி தண்டனை விபரம் அறிவிக்கப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us