ADDED : ஏப் 30, 2026 11:55 PM
பங்காருபேட்டை: பீஹாரில் இருந்து முசாபர்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் 50 சிறுவர்கள், நேற்று முன்தினம் மதியம், பங்காருபேட்டை ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
அங்கிருந்து ஹாவேரிக்கு பஸ் மூலம் அழைத்துச் செல்ல, பங்காருபேட்டை பஸ் நிலையத்திற்கு வந்து காத்திருந்தனர். பஸ் நிலையத்தில் இருந்த சிலருக்கு, இவர்கள் கடத்தி வரப்பட்டவர்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அவர்கள் உடனடியாக, 112 எண்ணில் போலீசுக்கு தகவல் கொடுத்தன ர். இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் அங்கு வந்து, சிறுவர்களை அழைத்து வந்த முஜாமில், 35, அப்ரோஸ், 40 ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
சிறுவர்கள், குழந்தை தொழிலாளர்களாக வேலைக்கு அழைத்து வரப்பட்டனரா என்றும் விசாரித்தனர்.
மொழி பிரச்னை காரணமாக, அவர்களிடம் விசாரிப்பதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து, 50 சிறுவர்களை மீட்டு, சிறுவர்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
