/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிதாக 50 இடங்களில் சிக்னல்கள்
/
போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிதாக 50 இடங்களில் சிக்னல்கள்
போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிதாக 50 இடங்களில் சிக்னல்கள்
போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிதாக 50 இடங்களில் சிக்னல்கள்
ADDED : ஜன 20, 2026 06:29 AM
பெங்களூரு: பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக புதிதாக 50 இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட உள்ளன.
பெங்களூரு போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக புதிதாக 50 இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட உள்ளன.
அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சந்திப்புகளில் புதிய சிக்னல்கள் அமைக்கப்படும்.
அதே போல, 100 மீட்டர் இடைவெளியில் மிக அருகில் உள்ள சிக்னல்கள் தேவை தானா என்பது குறித்து மறுஆய்வு செய்யப்படும்.
தேவையில்லாத இடங்களில் உள்ள சிக்னல்கள் அகற்றப்படும். இந்த பணிகள் விரைவில் துவங்கும். போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நேரம், வாகனங்களின் எண்ணிக்கை, அருகிலுள்ள பகுதிகள் ஆகியவற்றை மையப்படுத்தி சிக்னல்கள் அகற்றப்படுவது குறித்து முடிவுகள் எடுக்கப்படும்.
பெங்களூரில் 14,000 கி.மீ., துாரத்திற்கு சாலைகள் உள்ளன. பதிவு செய்யப்பட்ட 1.2 கோடி வாகனங்கள் உள்ளன. இதற்கு தேவையான அளவிற்கு சிக்னல்கள் உள்ளதா என்பது ஆராயப்படும்.
மற்ற முக்கிய நகரங்களில் உள்ள சிக்னல்களின் எண்ணிக்கையை, பெங்களூரில் உள்ள சிக்னல்களின் எண்ணிக்கையுடன் அதிகாரிகள் ஒப்பிட்டு பார்க்கின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

