/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சாமுண்டி மலை கோவில் அருகே போலீஸ் பாதுகாப்புடன் அபிவிருத்தி பணி
/
சாமுண்டி மலை கோவில் அருகே போலீஸ் பாதுகாப்புடன் அபிவிருத்தி பணி
சாமுண்டி மலை கோவில் அருகே போலீஸ் பாதுகாப்புடன் அபிவிருத்தி பணி
சாமுண்டி மலை கோவில் அருகே போலீஸ் பாதுகாப்புடன் அபிவிருத்தி பணி
ADDED : ஜன 20, 2026 06:29 AM

மைசூரு: மைசூரு சாமுண்டி மலையில், சாமுண்டீஸ்வரி கோவில் அருகே, 'பிரசாத்' திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து, மலையில் வசிக்கும் மக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் அபிவிருத்தி பணிகள் நடந்து வருகின்றன.
மத்திய அரசின், 'பிரசாத் எனும் புனித யாத்திரையின் புத்துணர்ச்சி மற்றும் ஆன்மிக மேம்பாட்டுக்கான தேசிய பணி திட்டத்தின் கீழ், மைசூரு சாமுண்டி மலையில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இத்திட்டப்பணிகள் கோவில் அருகே துவக்கப்பட்டதால், பக்தர்கள், மலையில் வசிக்கும் மக்கள், ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இப்பணிகளை வேறு பகுதியில் நடத்தும்படி கூறி வருகின்றனர்.
இதன் பின்னரும், போலீஸ் பாதுகாப்புடன் அதே பகுதியில் பணிகள் நடந்து வருவதால், நேற்று சாமுண்டி மலை கிராம பஞ்சாயத்து அலுவலகம் முன் பலரும் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதுடன், அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால், நேற்றும் மலையில் பரபரப்பு காணப்பட்டது.

