/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
உடல் உறுப்பு மாற்று சிகிச்சை 5,387 பேர் காத்திருப்பு
/
உடல் உறுப்பு மாற்று சிகிச்சை 5,387 பேர் காத்திருப்பு
உடல் உறுப்பு மாற்று சிகிச்சை 5,387 பேர் காத்திருப்பு
உடல் உறுப்பு மாற்று சிகிச்சை 5,387 பேர் காத்திருப்பு
ADDED : ஆக 04, 2025 05:13 AM
பெங்களூரு: கர்நாடகாவில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய, 5,387 பேர் காத்து கொண்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
கர்நாடகா மாநில சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:
கர்நாடகாவில் நடப்பாண்டில் 121 பேர் உறுப்பு தானம் செய்து உள்ளனர். அவர்களிடமிருந்து 195 சிறுநீரகங்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட உறுப்புகள் பெறப்பட்டு உள்ளன. தோல், இதய வால்வுகள் உட்பட 180க்கும் மேற்பட்ட திசுக்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகளில் 6,829 பேர் உறுப்பு தானம் செய்து உள்ளனர். கர்நாடகாவில் இதுவரை 43,221 பேர் உறுப்பு தானம் செய்வதாக பதிவு செய்து உள்ளனர். அதிக எண்ணிக்கையில் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்து உள்ளவர்கள் பட்டியலில், நாட்டிலே கர்நாடகா மூன்றாவது இடத்தில் உள்ளது.
இருப்பினும், உடல் உறுப்புகளுக்காக காத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தற்போது, 5,387 பேர் காத்து கொண்டு உள்ளனர். மாநிலத்தில், பெங்களூரில் மட்டும் 51 மருத்துவமனைகளுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.