ADDED : மே 13, 2026 03:25 AM
அ நிறம் | அளவு
பெங்களூரு: குடிபோதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக, 579 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பெங்களூரு போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிக்கை:
குடிபோதையில் அதிவேகமாக வாகனம் ஓட்டுவோரை கட்டுப்படுத்த, இம்மாதம் 4ம் தேதி முதல், 10ம் தேதி வரை பெங்களூரின் 53 போக்குவரத்து போலீஸ் நிலைய எல்லையில், நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கார், பைக் உட்பட, 45,272 வாகனங்கள் சோதனை நடத்தப்பட்டன. இவற்றில் மதுபானம் அருந்தி, வாகன ஓட்டிய 579 பேர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதிவேகமாக வாகனம் ஓட்டியது தொடர்பாக, 179 ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவானது. 1.80 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டது.
