/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சீனியர் மாணவர்கள் தாக்கி 5ம் வகுப்பு சிறுவன் பலி
/
சீனியர் மாணவர்கள் தாக்கி 5ம் வகுப்பு சிறுவன் பலி
ADDED : ஆக 08, 2025 04:12 AM
விஜயபுரா: கை கடிகாரம் விஷயத்தில், ஐந்தாம் வகுப்பு மாணவரை, ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் அடித்து கொன்றனர்.
பீஹாரை சேர்ந்த சுனில் மற்றும் ஸ்ருதி தம்பதி, பிழைப்பு தேடி விஜயபுராவுக்கு வந்தனர். இவர்கள், பானிபூரி வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்துகின்றனர். விஜயபுரா புறநகரில், யோகாபுராவில் வசிக்கின்றனர். இவர்களின் மகன் அன்ஸ் சுனில், 11. இவர் யோகாபுராவில் உள்ள கல்வி நிறுவனத்தில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார்.
கடந்த ஐந்து நாட்களுக்கு, அன்ஸ் கையில் கைக்கடிகாரம் கட்டியிருந்தார். இதன் மீது கண் வைத்த, ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மூவர், அதை பறிக்க முயற்சித்தனர்.
இதை எதிர்த்த அன்சை கண் மூடித்தனமாக தாக்கிவிட்டு, கை கடிகாரத்தை பறித்து கொண்டனார். பலத்த காயமடைந்த அன்ஸ், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, நேற்று மாலை உயிரிழந்தார்.
பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மூன்று மாணவர்கள் மீது, அன்ஸ் தந்தை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.