/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
போலீசை பணி செய்யவிடாமல் தடுத்த 6 பேர் கைது
/
போலீசை பணி செய்யவிடாமல் தடுத்த 6 பேர் கைது
ADDED : ஆக 11, 2025 04:45 AM
மங்களூரு: போலீசை பணி செய்யவிடாமல் தடுத்த, ஆறு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் பெண்கள் உடல்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற யு - டியூபர்கள் மீது, கடந்த 6ம் தேதி ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது.
தாக்குதலுக்கு ஆளானவர்களை காப்பாற்ற சென்ற போலீசாரையும், அந்த கும்பல் தடுத்து நிறுத்தியது. இதுதொடர்பாக தர்மஸ்தலா போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ., சமர்த் அளித்த புகாரில், போலீசை பணி செய்யவிடாமல் தடுத்ததாக 27 பேர் மீது வழக்குப்பதிவானது.
இந்த வழக்கில் தர்மஸ்தலாவை சேர்ந்த பத்மபிரசாத், 32, சுகாஷ், 22, சசிதர், 30, புதுமோனு, 42, சேத்தன், 21, குருபிரசாத், 21 ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.