ADDED : ஏப் 28, 2026 04:31 AM

பெங்களூரு: சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு வாகனங்களை ஓட்ட கொடுக்க கூடாது என்று, அரசும், நீதிமன்றமும் எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் யாருமே கண்டுகொள்வது இல்லை. இதன் விளைவு பேராபத்தில் சென்று முடிகிறது.
இந்நிலையில், பெங்களூரில் ஒரே ஸ்கூட்டரில் 2 சிறுவர்கள், நான்கு சிறுமியர்கள் என 6 பேர் பயணம் செய்த புகைப்படம், சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் பாதராயனபுரா மெயின் ரோடு கவுரிபாளையா பகுதியில் நேற்று முன்தினம் எடுக்கப்பட்டு உள்ளது. ஸ்கூட்டர் ஓட்டும் சிறுவன் உட்பட 6 பேரும் ஏழு முதல் 10 வயது உடையவர்கள் தான்.
'சிறுவனை நம்பி ஸ்கூட்டர் கொடுத்தது யார், என்ன தைரியத்தில் தன்னுடன் 5 பேரை ஸ்கூட்டரில் அமர வைத்து சிறுவன் ஸ்கூட்டரை ஓட்டி செல்கிறான். ஏதாவது அசம்பாவிதம் நடந்து இருந்தால், ஆறு பிஞ்சுகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு' என்று, சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுந்து உள்ளன. ஸ்கூட்டர் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து உள்ளது.
