தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ துனியா விஜய் மகன் மீது 6 வழக்குகள் பதிவு

 துனியா விஜய் மகன் மீது 6 வழக்குகள் பதிவு

 துனியா விஜய் மகன் மீது 6 வழக்குகள் பதிவு


ADDED : செப் 02, 2026 11:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2026 11:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கெங்கேரி: கன்னட திரையுலகில் முன்னணி நடிகர் துனியா விஜய். இவரது மகன் சாம்ராட், 21. பெங்களூரு மைசூரு ரோட்டில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பி.பி.ஏ., முதலாம் ஆண்டு படிக்கிறார்.

கடந்த 31ம் தேதி சாம்ராட்டும், அவரது நண்பர்களும் ஆர்.ஆர்.நகர் பகுதியில் ஜீப்பில் சென்றனர்.

ஜீப்பை முந்தியபடி காரில், சாம்ராட் உடன் படிக்கும் மனீஷ் கவுடா, 21, அவரது நண்பர்கள் சென்றனர். இதனால் இருதரப்புக்கும் சண்டை ஏற்பட்டது.

நேற்று முன்தினம் காலையில் பல்கலைக்கழகத்தின் முன் தனியாக நின்ற மனீஷ் கவுடாவை காரில் கடத்தி சென்று, சாம்ராட், அவரது நண்பர்கள் சம்ரித் சிம்ஹா, 21, விஸ்வாஸ், 21, ஸ்கந்தா வெங்கடேஷ், 21, சமீத், 21, ஆகியோர் சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து, நேற்று முன்தினம் கெங்கேரி போலீஸ் நிலையத்தில் மனீஷ் கவுடா புகார் செய்தார்.

இந்நிலையில் சாம்ராட், அவரது நண்பர்கள் ஐந்து பேர் மீது ஆறு பிரிவுகளில் கெங்கேரி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். விசாரணை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us