தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ முஸ்லிம் மதத்திற்கு மாற மாட்டேன் அமைச்சர் பசவராஜ் ராயரெட்டி உறுதி

 முஸ்லிம் மதத்திற்கு மாற மாட்டேன் அமைச்சர் பசவராஜ் ராயரெட்டி உறுதி

 முஸ்லிம் மதத்திற்கு மாற மாட்டேன் அமைச்சர் பசவராஜ் ராயரெட்டி உறுதி


ADDED : செப் 02, 2026 11:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2026 11:55 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொப்பால்: ''முஸ்லிம் மதத்திற்கு மாற மாட்டேன்,'' என, உயர்கல்வி அமைச்சர் பசவராஜ் ராயரெட்டி கூறினார்.

இது குறித்து, அவர் நேற்று கூறியதாவது:

உயர்கல்வி துறையில் பெரிதாக ஒன்றும் இல்லை. பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும், பேராசிரியர்களும் 100 ரூபாய் சால்வையோடு எனது அலுவலகத்திற்கு வருகின்றனர். அவர்கள் என்னை பாராட்டுகின்றனர். வேறு ஒன்றும் பெரிதாக இல்லை.

கடவுள் மீதான பக்தியின் காரணமாகவே அதிகமாக கோவிலுக்கு செல்கிறேன். மழை பெய்யட்டும் என கடவுளிடம் வேண்டுகிறேன். அனைத்து ஜாதி, மதத்தை சேர்ந்தவர்களையும் நேசிக்கிறேன். ஹிந்து மதத்தின் முக்கிய புனித தலங்களுக்கு சென்று உள்ளேன்.

திருக்குர் ஆன், பைபிளை படித்திருக்கிறேன். நான் முஸ்லிம் மதத்திற்கு மதம் மாற மாட்டேன். நான் பேசும் கருத்துகள் திரித்து வெளியிடப்படுவது வேதனை அளிக்கிறது. தனிப்பட்ட ஆதாயத்திற்காக மத தலைவர்களை அணுக மாட்டேன். அனைத்து மதங்களும் நீதியையே போதிக்கின்றன.

பா.ஜ.,வினர் என்னை பற்றி அவதுாறு பரப்புவதில்லை. ஊடகத்தினர் தான் என்னை பற்றி அவதுாறு பரப்புகின்றனர். எனது தொகுதியில் நிலுவையில் உள்ள வளர்ச்சி பணிகளை முடிக்க நடவடிக்கை எடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us